

கோவை மத்திய சிறையில் முகக் கவசம் (மாஸ்க்) தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. தினசரி 2 ஆயிரம் முகக் கவசங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றை மருத்துவமனைகளுக்கு வழங்க சிறை நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. கரோனா வைரஸ் தடுப்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் முகக் கவசத்தின் தேவை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தனியார் மூலம் முகக் கவசம் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மத்திய சிறைக் கைதிகள் மூலமும் முகக் கவசம் தயாரிப்புப் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக கோவை மற்றும் திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது,‘‘ தண்டனைக் கைதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்த சிறைச் சாலைகளில் தொழிற்கூடங்கள் உள்ளன.
இங்கு காவலர்கள் மற்றும் கைதிகளுக்கான உடைகள் தயாரிக்கப்படுகின்றன. முகக் கவசத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு கோவை மத்திய சிறையில் 3 லேயர் அடங்கிய முகக்கவசம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தினசரி 2 ஆயிரம் எண்ணிக்கையில் சுகாதாரமான முறையில் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 20 கைதிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருமுறை மட்டும் பயன்ப டுத்தக்கூடிய இவ்வகை முகக்கவ சங்களை அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்க திட்டமி டப்பட்டுள்ளது. இதற்கான மூலப் பொருட்கள் தனியார் நிறுவனத் திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
கோவை மத்தியச் சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கூறும்போது,‘‘ சிறியவர்கள், முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் முகக் கவசம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மூலப் பொருட்கள் கொள்முதல் செய்த நிறுவனத்தின் மூலம் தயாரிப்பு குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தயாரிப்புப் பணியில் ஈடுபட் டுள்ள கைதிகளுக்கு இதற்கான ஊதியமும் வழங்கப்படும்’’ என்றார்.