தொலைபேசி கட்டணம் கட்ட மார்ச் 31 வரை அவகாசம்

தொலைபேசி கட்டணம் கட்ட மார்ச் 31 வரை அவகாசம்
Updated on
1 min read

பிஎஸ்என்எல் சென்னைதொலைபேசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியுள்ளதாவது:

பிஎஸ்என்எல் தரைவழிதொலைபேசி, பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட் பெய்ட்மொபைல் ஆகியவற்றுக்கான மாதக் கட்டணம் செலுத்தகடந்த 22-ம் தேதி கடைசி நாளாகும். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இக்கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது கட்டணத்தை https:/portal.bsnl.inஎன்ற இணைய தளம் மற்றும் My BSNL என்றசெயலி ஆகியவற்றின் மூலம்செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in