காவிரி ஆற்றுப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை பசுமைத் தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி விளக்கம்: பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

காவிரி ஆற்றுப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை பசுமைத் தீர்ப்பாயத்தில் ஓஎன்ஜிசி விளக்கம்: பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
Updated on
1 min read

காவிரி ஆற்றுப் படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஓஎன்ஜிசி விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அந்நிறுவனப் பணிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை பசுமைத் தீர்ப்பாயம் நீக்கி உத்தரவிட்டது.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டி யன். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தின் தென் மண்டல 2-வது அமர்வில் ஒரு மனுவை தாக் கல் செய்தார். அதில் கூறியிருந்த தாவது:

மத்திய பொதுத் துறை நிறுவன மான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி), முன்னறிவிப்பின்றி திருவாரூரை சுற்றியுள்ள காவிரி ஆற்றுப் படுகையில் ஒரு திட்டப் பணியை தொடங்கியுள்ளது. அத் திட்டத்துக்கு அனுமதி பெறப் பட்டதா, இல்லையா? என்ப தில் முரண்பாடு உள்ளது. இத் திட்டம் மூலம் மீத்தேன், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவு கிறது. இத்திட்டம் செயல்படுத்தப் பட்டால் எங்கள் பகுதியில் விவசாயம், சுற்றுச்சூழல் பாதிக்கப் படும். எனவே, இத்திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த அமர்வு, ஓஎன்ஜிசி மேற்கொண்டு வந்த பணிக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் முன்பு மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

ஓஎன்ஜிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 1984 முதல் காவிரி ஆற்றுப் படுகையில் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அதற்காக மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 600 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 200 இடங்களில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கப்படுகின்றன. மீத்தேன் எடுக்கும் திட்டம் எதுவும் ஓஎன்ஜிசியிடம் இல்லை’’ என்று வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஓஎன்ஜிசி பணிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி அமர்வு உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான அடுத்த விசாரணை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சிவ.ராஜசேகரன், வழக்குக்கு உதவி செய்யும் வகையில் நியமிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகி யோரும் ஆஜராகினர்.

இத்திட்டம் மூலம் மீத்தேன், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in