பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்வு; ரூ.24 கோடியில் கல்வி, சுகாதார திட்டங்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்வு; ரூ.24 கோடியில் கல்வி, சுகாதார திட்டங்கள்: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
2 min read

தமிழகத்தில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் வேலூர், திண்டுக் கல், நாகை, திருநெல்வேலி உள்ளிட்ட 18 பகுதிகளில் ரூ.24 கோடியே 25 லட்சத்தில் கல்வி, சுகாதார திட்டங்கள் செயல்படுத் தப்படும் என்று முதல்வர் பழனி சாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

பழுதடைந்துள்ள மதுரை அரசு சட்டக் கல்லூரிக்கு, புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும். குற்ற வழக்கு தொடர்புத் துறை மற்றும் சட்டக் கல்லூரி இயக்கு நகரங்களுக்கு சொந்தக் கட்டிடம் ரூ.38 கோடியில் கட்டப்படும்.

தமிழகத்தில் 41,133 அங்கன் வாடி மையங்களில் சிறிய கட்டிட பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்துக்கு ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.12 கோடியே 34 லட்சம் வழங்கப்படும். 10,888 அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.10 கோடியே 59 லட்சம் செலவில் மேசை, நாற் காலி, இரும்பு அலமாரி போன்ற தளவாட சாமான்கள் வழங்கப்படும்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்வி பயிலும் குழந்தை களுக்கு 2 இணை வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மற்றும் தஞ்சை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரூ.8 கோடியே 47 லட்சம் மதிப் பில் 3 லட்சத்து 23 ஆயிரம் குழந்தை கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும்.

சென்னை மயிலாப்பூரில், ரூ.9 கோடியே 33 லட்சம் மதிப்பில் சமூக நல ஆணையரகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். புதுக் கோட்டை அன்னை சத்தியா அரசினர் குழந்தைகள் காப்பகத் துக்கு புதிய கட்டிடம், பணியாளர் கள் குடியிருப்பு ஆகியவை ரூ.10 கோடியே 23 லட்சத்தில் கட்டப்படும்.

மனவளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை சிதைவு நோய், பல்வகை குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய 1,000 பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் தனித்தனியே ரூ.10 கோடி ஒதுக்கி சிகிச்சை அளிக்கப்படும்.

சேலம் மாவட்ட செவித் திறன் குறைபாடு உடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் 1.31 ஏக்கர் நிலம் வழங்கி ரூ.6 கோடியே 70 லட்சம் மதிப்பில் விடுதி வசதியுடன் கூடிய சொந்தக் கட்டிடம் கட்டப்படும்.

பாலியல் வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்டு, வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளி பெண்கள், குழந்தைகளுக்கு விரை வாக இழப்பீடு வழங்க, ‘மாற்றுத் தறினாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020’-க்கான நிதியம் ரூ.5 கோடி வைப்பீட்டுடன் உருவாக்கப்படும்.

சிறுபான்மையினர் அதிக அள வில் வாழும் கூடலூர், மணமேல் குடி, திருவாடணை மற்றும் மண்ட பம் பகுதிகளிலும், வேலூர், பேர்ணாம்பட்டு, மேல் விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக் கல், பள்ளப்பட்டி, நாகை, கீழக் கரை, தூத்துக்குடி, காயல்பட்டி னம், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, கொல்லங்கோடு, நாகர்கோவில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய 18 பகுதி களிலும் சமுதாயக் கூடம், நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை, புதிய அரசு மேல்நிலைப் பள்ளி கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், மகளிர் விடுதிகள், மதரசா பள்ளி களுக்கு கணினி வசதி உள்ளிட்ட திட்டங்கள் ரூ.24 கோடியே 24 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

இத்துறையின்கீழ் இயங்கி வரும் 1,301 விடுதிகளுக்கு டிடிஎச் இணைப்புடன் எல்இடி தொலைக் காட்சி பெட்டிகள், ரூ.5 கோடியே 39 ஆயிரத்தில் வழங்கப்படும்.

பள்ளி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதாந் திர உணவுக் கட்டணம் ரூ.900-த்தில் இருந்து ரூ.1,000 ஆகவும், கல்லூரி விடுதி மாணவர்களக்கு ரூ.1,000-த்தில்இருந்து ரூ.1,100 ஆகவும் உயர்த்தப்படும். பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு கட்டணம் பள்ளி மாணவர்களுக்கு ரூ.20-ல் இருந்து ரூ.40 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.40-ல் இருந்து 80 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பிற மலைக் கள்ளர் பள்ளிகளில் பராம ரிப்புப் பணிகளுக்கு ரூ.5 கோடி வழங்கப்படும். துறையின்கீழ் இயங்கி வரும் 1,354 விடுதிகளில் 1,290 விடுதிகள் சொந்தக் கட்டிடங் களில் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டிடங்களில் பராமரிப்புப் பணிக்காக ரூ.9 கோடி ஒதுக்கப் படும். அதே போல் 1,099 பள்ளி விடுதிகளில் 11 பள்ளி விடுதிகள் 1 கோடியே 98 லட்சம் மதிப்பில் கல்லூரி விடுதிகளாக தரம் உயர்த்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in