கரோனா தொற்று; ’தனிமைப்படுத்தப்பட்டவர்’ முத்திரையுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்: திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு வந்தபோது சிக்கினார்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

துபாயிலிருந்து சென்னை வந்த இளைஞர் ’தனிமைப்படுத்தப்பட்டவர்’ என்று முத்திரையுடன் திருவல்லிக்கேணியில் விடுதியில் தங்கியிருந்த இளைஞர் உடல் நலம் சரியில்லாததால் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது பிடித்து அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இன்று மதியம் 3 மணி அளவில் சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள தனியார் நர்சிங் ஹோமுக்கு வந்த இளைஞர் ஒருவர் காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரை மருத்துவர்கள் சோதிக்கும்போது அவரது கையில் ’தனிமைப்படுத்தப்பட்டவர்’ என்கிற அரசின் முத்திரை குத்தப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவரை உடனடியாக தனி அறைக்குள் அடைத்துவிட்டு ஐஸ் ஹவுஸ் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக அங்குவந்த போலீஸார் இளைஞரைப்பிடித்து விசாரித்துள்ளனர்.அப்போது அவர் ஆந்திர மாநிலம், ஸ்ரீ காகுலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், 23 வயது இளைஞரான அவர் ஏற்கெனவே துபாயிலிருந்து சென்னை திரும்பியுள்ளதும், . அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர் என்பதால் ’தனிமைப்படுத்தப்பட்டவர்’ என முத்திரைக்குத்தப்பட்டு தனிமையில் இருக்க பணிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதை அலட்சியம் செய்த அவர் இருந்த இடத்திலிருந்து வெளியில் வந்து ஜாம்பஜாரில் உள்ள ஒரு மேன்ஷனில் கடந்த 2 நாட்களாக தங்கியிருந்துள்ளார். இன்று காய்ச்சல் அதிகமாக இருந்த காரணத்தால் சாலையில் நடந்தே தனியார் .நர்சிங் ஹோமுக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்தபோதுதான் அவர் கண்காணிப்பில் இருப்பவர் என்கிற முத்திரை பார்த்து பிடிக்கப்பட்டார்.

உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அவர் பாதுகாப்பாக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு தொற்று இருக்கிறதா என்பது மருத்துவமனையின் சோதனைக்கு பின்னரே தெரியவரும், ஆனாலும் அவர் தங்கியிருந்த விடுதி, மருத்துவமனையில் அவரை சோதித்த மருத்துவர் உள்ளிட்ட மற்றவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in