கடன் தொல்லையால் எடுத்த தவறான முடிவு: குழந்தையை கொன்று திருப்பூரில் தம்பதி தற்கொலை

கடன் தொல்லையால் எடுத்த தவறான முடிவு: குழந்தையை கொன்று திருப்பூரில் தம்பதி தற்கொலை

Published on

திருப்பூரில் கடன் தொல்லை காரணமாக 4 வயது குழந்தையைக் கொன்று, தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

திருப்பூர் கேவிஆர் நகர் பகுதியிலுள்ள கிரி நகர் முதல் வீதியில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்துவந்தவர் அடகுக் கடை உரிமையாளர் சி.ரமேஷ்(35). மனைவி ஜெயந்தி(25). மகன் பிரணவ்(4). திருப்பூர் கருவம் பாளையம் மற்றும் பல்லடம் சாலை ஆகிய இடங்களில், நகை அடகு கடை நடத்தி வந்த ரமேஷ், சில மாதங்களாக வருமானம் இன்றி சிரமத்தில் இருந்துள்ளார். இதனால், பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கி தொழில் நடத்தி வந்ததாகத் தெரிகிறது. கடன் கொடுத்தவர்களுக்கு திருப்பித் தர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அவரும், மனைவியும் 4 வயது மகன் பிரணவை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், அருகே வசிப்பவர்கள் நேற்று முன்தினம் இரவு கதவை தட்டியபோது திறக் கப்படவில்லை. ஆனால், வீட்டில் மின்விளக்குகள் எரிந்து கொண் டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தை உட்பட 3 பேரும் தூக்கிட்டு இறந்துகிடந்தது தெரிய வந்தது.

தகவலறிந்து சம்பவ இடத் துக்குச் சென்ற திருப்பூர் மத்திய போலீஸார், 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், 32 பேரிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் வர வேண்டி இருப்பதாகவும், 24 பேருக்கு ரூ.70 லட்சம் பணம் அளிக்க வேண்டி உள்ளதாகவும், கடனை செலுத்த வேறு வழி இல்லையெனவும் ரமேஷ் கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இவ்வாறு போலீஸார் கூறினர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in