Published : 23 Mar 2020 08:19 AM
Last Updated : 23 Mar 2020 08:19 AM

சூதாட்ட புகார் எதிரொலி: திருப்பத்தூர் அரசு ஊழியர்கள் மன்றத்துக்கு ‘சீல்’- மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நடவடிக்கை

திருப்பத்தூரில் அரசு ஊழியர்கள் மன்றம் (ஆபீசர்ஸ் கிளப்) என்ற பெயரில் சூதாட்டம் நடத்தி வந்த கட்டிடத்துக்கு ஆட்சியர் உத்தரவின் பேரில் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே, அரசு பூங்கா வளாகத்தையொட்டி அரசு ஊழி யர்களின் மன்றம் என்ற பெயரில் ஆபீசர்ஸ் கிளப் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

அரசு ஊழியர் மன்றத்தில் இருந்த ஆவணங்களை சோதனையிட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள். இந்த மன்றத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த மன்றத்தில் அரசு ஊழியர்கள் முக்கிய ஆலோசனைகள் நடத்த கூடுவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த மன்றத்துக்கு அரசு ஊழியர்கள் யாரும் வருவது இல்லை. இங்கு, அரசு ஊழியர்களின் ஆலோ சனைக்கூட்டம் நடைபெறுவதும் இல்லை எனக்கூறப்படுகிறது.

இதனால், அரசு ஊழியர்கள் அல்லாத நபர்கள் வசம் மன்றம் சென்றதாக கூறப்படுகிறது. தினசரி பகல் மற்றும் மாலை நேரங்களில் மன்றத்துக்கு வரும் நபர்கள் அங்கே அமர்ந்து சூதாட்டம் ஆடுவது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் சமூக ஆர்வலர்கள் புகார் செய்தனர். இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை பொதுமக்கள் நேற்று கடைபிடித்தனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நகரின் முக்கிய பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நகராட்சி அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் தனது காரில் சென்றபோது அங்கிருந்த மன்றத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கூடியிருப்பதை அவர் கண்டார். உடனே, காரை நிறுத்திவிட்டு திடீரென மன்றத் தின் உள்ளே நுழைந்தார். இதைக் கண்டதும், அங்கிருந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே நின்றனர்.

இதையடுத்து, அவர்களிடம் ஆட்சியர் விசாரணை நடத்திய போது அவர்கள் விடுமுறை என்பதால் மன்றத்துக்கு வந்தோம் எனக்கூறினர்.

இதையடுத்து, அவர்கள் வெளி யேற்றப்பட்டனர். விசாரணையில், அவர்கள் யாருமே அரசு ஊழியர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்த போது, அங்கு கட்டுக்கட்டாக சீட்டு கட்டுகள், பணம் வைத்து சூதாட்டம் நடத்தி அதன் மூலம் கிடைத்த பரிசுத் தொகை, பணம் பட்டுவாடா செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், காலி மது பாட்டில்கள், போதைவஸ்துக்கள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்து அரசு ஊழியர்கள் மன்றத்துக்கு ‘சீல்’ வைக்க ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்பேரில், வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் மன்றத்துக்கு ‘சீல்’ வைத்தார். மேலும், அரசு ஊழியர்கள் பெயரில் இயங்கி வருவ தால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு ஆட்சியர் சிவன் அருள் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x