Published : 22 Mar 2020 07:35 PM
Last Updated : 22 Mar 2020 07:35 PM

திண்டுக்கல் நகரில் ஆதரவற்றவர்களை தேடிச்சென்று உணவுப் பொட்டலங்கள் வழங்கிய ஓட்டல் உரிமையாளர்

திண்டுக்கல் நகரில் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கிய ஓட்டல் உரிமையாளர் முஜிப்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரில் சுய ஊரடங்கை முன்னிட்டு நகரமக்கள் வீட்டிற்குள் இருந்தநிலையில் ஆதரவற்ற நிலையில் பாலத்திற்கு கீழ் தங்கியிருந்தவர்களுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் உணவு வழங்கினர்.

திண்டுக்கல் நகரில் நத்தம் மேம்பாலம், கரூர் மேம்பாலம் என பல்வேறு இடங்களில் இருக்கு இடமின்றி ஆதரவற்றநிலையில் பலர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு உணவு தேவையை பூர்த்தி செய்ய திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டல் உரிமையாளர் அவரது நண்பர்கள் முன்வந்தனர்.

ஓட்டலில் உணவு சமைத்து திண்டுக்கல் நகர் முழுவதும் ஆதரவற்ற நிலையில் உள்ளவர்களை தேடிச்சென்று உணவு பொட்டலங்கள் வழங்கினர். திண்டுக்கல் எம்.வி.எம்., கல்லூரி அருகே கரூர் மேம்பாலத்திற்கு கீழ் காலையில் இருந்து உணவின்றி இருந்த பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும் நத்தம் மேம்பாலம் பகுதி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று ஓட்டல் உரிமையாளர் முஜிப், அவரது நண்பர்கள் மற்றும் ஓட்டல் ஊழியர்கள் உணவுபொட்டலங்களை வழங்கினர்.

‘தங்கள் அருகாமையில் யாரும் உணவின்றி ஆதரவற்றவர்கள் உள்ளனரா, இருந்தால் தெரிவிக்கவும் என அலைபேசி எண்ணுடன் வாட்ஸ்அப் குரூப்களில் அறிவிப்பு வெளியிட்டனர். இதன்மூலம் வந்த தகவல்கள் அடிப்படையிலும் ஆதரவற்றவர்கள் இருக்கும் இடத்திற்கே தேடிச்சென்று உணவுப்போட்டலங்களை வழங்கினர்.

சுயஊரடங்கு அமலில் இருக்கும்போது உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கியவர்களின் மனிதநேயச்செயல் அனைவரின் பாரட்டைபெற்றது.

இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் முஜிப் கூறியதாவது: "எந்தநாளும் இல்லாத அளவிற்கு சுயஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால், சாலையோரம் வசிப்பவர்கள் இன்று மிகவும் தனிமையில் இருப்பதை உணர்ந்தனர்.

உணவு பொட்டலங்கள் கொடுக்கும் போது அவர்கள் பசியில் இருந்தது தெரிந்தது. உரிய நேரத்தில் தராமல் தாமதமாக வந்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.

காலையில் 250 உணவு பொட்டலங்கள் தயாரித்து திண்டுக்கல் நகர் முழுவதும் உள்ள ஆதரவற்றவர்களை தேடிச்சென்று நண்பர்களுடன் சேர்ந்து வழங்கினோம். இரவு உணவும் தயார் செய்து வழங்க உள்ளோம" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x