Published : 30 May 2014 10:22 AM
Last Updated : 30 May 2014 10:22 AM

வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மோடி; வாரணாசி தொகுதியை தக்க வைத்துக்கொண்டார்

மக்களவைத் தேர்தலில் வதோதரா மற்றும் வாரணாசி தொகுதிகளில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, வதோதரா எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான தொகுதிகளைக் கைப்பற்றுவது முக்கியம் என பாஜக கருதியது. தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அந்த மாநிலத்தின் வாரணாசி தொகுதியிலும் மோடி போட்டியிட்டார்.

அதற்கேற்ப மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71-ல் பாஜகவும், அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

உத்தரப் பிரதேச மக்கள் பெற்றுத்தந்த இந்த பெருவாரியான வெற்றிக்கு நன்றி பாராட்டும் விதமாக, வாரணாசி தொகு தியை தக்கவைத்துக் கொள்ள மோடி முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

அதோடு, 2017-ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதிக்கு மோடி முக்கியத்துவம் அளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முலாயம் ராஜினாமா

அதேபோன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் உத்தரப் பிரதேசத்தின் மெயின்புரி, ஆஸம்கர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற் றிருந்தார்.

இதில், மெயின்புரி தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஆஸம்கர் தொகுதியில் எம்.பி.யாக நீடிக்க முடிவு செய்துள்ளார்.

இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெறும் வேட்பாளர்கள், ஏதாவது ஒரு தொகுதியை தேர்தலில் வெற்றி பெற்ற 14 நாள்களுக்குள் ராஜினாமா செய்யவேண்டும் என்ற சட்ட விதிமுறை உள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முடிவுகள் கடந்த மே 16-ம் தேதி அறிவிக்கப்பட்டது. எனவே, ராஜினாமா செய்வதற்கு கடைசி நாளான மே 29-ம் தேதி மோடியும் முலாயமும் தாங்கள் வெற்றி பெற்றதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்துள்ளனர்.

இருவரின் ராஜினாமா கடிதங் களும் கிடைக்கப் பெற்றுள்ளதா கவும், அதை ஏற்றுக்கொண்டு காலியாக உள்ள இரு தொகுதிகள் குறித்த அறிவிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கும் நட வடிக்கை தொடங்கிவிட்டதாகவும், மக்களவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவில் இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

மோடி பெற்ற வாக்குகள்

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் அமைந்துள்ள வதோதராவில் 8,45,464 வாக்குகள் பெற்று நரேந்திர மோடி வெற்றி பெற்றார்.

இங்கு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதனன் மிஸ்துரியை விட 5,70,128 வாக்குகள் கூடுதலாகப் பெற்று மோடி சாதனை படைத் தார். அதோடு குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதி களையும் பாஜக வேட்பாளர்களே கைப்பற்றினர்.

மோடி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான வாரணாசியில், அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டி யிட்டார்.

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தொகுதியில், 5,81,022 வாக்குகளை மோடி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அர்விந்த் கேஜ்ரிவால் 2,09,238 வாக்குகள் பெற்று தோல்வி யடைந்தார்.

வதோதரா மக்களுக்கு மோடி நன்றி

பிரதமர் நரேந்திர மோடி, ட்விட்டர் இணையதளத்தில் வியாழக்கிழமை கூறியுள்ளதாவது: வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். என் மீது அத்தொகுதி மக்கள் வைத்த அன்பின் காரணமாக, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றேன்.

வதோதரா தொகுதி மக்களுக்கு எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன். வரும் காலங்களில் இந்த தொகுதி சிறப்பாக வளர்ச்சிபெற நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறுகிறேன். வாரணாசி தொகுதியின் பிரதிநிதியாக இருக்க முடிவு செய்துள்ளேன்.

கங்கைத் தாய்க்கு சேவை செய்ய கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாக இதைத் கருதுகிறேன். வாரணாசியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன். சி.பி.எஸ்.சி. பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற எனது இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x