மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கரோனா காரணமாக மக்கள்ஊரடங்கு உத்தரவு நடைபெறுவ தால் சாலையோரம் வசிப்பவர் களுக்கு உணவு வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவால் சென்னையில் வீடு இல்லாமல் சாலைகளில் வசிக்கும் 9 ஆயிரம் பேர் சிரமம் அடைவர் என்றும், இதுபோல தமிழகம் முழுவதும் பலர் வீடில்லாமல் உள்ளனர் என்றும், எனவே அவர்களுக்கு உணவு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பாக வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் முறையீடு செய்தார். அப்போது சென்னை மாந கராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா னிவாஸ், சென்னையில் ஏற்கெனவே 51 இடங்களில் மாநகராட்சி இரவு நேர தங்குமிடங்கள் உள்ளன. ஊரடங்குதினத்தன்று சாலையோரம் வசிப்ப வர்களுக்கு உணவு வழங்க அந்த இடங்கள் பயன்படுத்தப்படும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சாலையோரம் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழை, எளியோருக்கு ஊரடங்கு தினத்தன்று உணவு வழங்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in