குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க பாரதியாரின் பாடத்திட்டத்தை பின்பற்ற முன்னாள் எம்பி யோசனை

குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க பாரதியாரின் பாடத்திட்டத்தை பின்பற்ற முன்னாள் எம்பி யோசனை
Updated on
1 min read

குழந்தைகளுக்கு நோய் வராமல் தடுக்க பாரதியாரின் பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் எம்.பி. பெல்லார்மின் பேசினார்.

மதுரை வாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவையின் 11-ம் ஆண்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. பேரவைத் தலைவர் பி.ராமன்நாயர் தலைமை வகித்தார். ஆண்டு விழா மலரை ஆர்.மணிகண்டன் வெளியிட, ஜெ.தாசையன் பெற்றுக்கொண்டார். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் பேசியதாவது:

வாழ்வதற்கு படைக்கப்பட்டது தான் மனித சமுதாயம். ஆதி காலத்தில் வேட்டையாடும் சமுதாயத்திலும் மனிதர்கள், விலங்குகள் இயற்கையுடன் பழகி வசித்தனர். விவசாய சமுதாயமாக மாறியபோதும் மனிதர்கள் ஒற்றுமையாக இருந்தனர். தற்போது மனிதர்கள் சமூகச் சிந்தனையில் இருந்து பிரிந்து கொண்டிருக்கின்றனர். தன்னைச் சுற்றி சுவரை எழுப்பிக்கொண்டு பல்வேறு துயரங்களை அனுப வித்து வருகின்றனர்.

இப்போது உணவுப் பொருள்கள் எதை எடுத்தாலும் விஷமாக உள்ளது. விவசாயத்தை முன்னேற்றுகிறோம் என்று கூறி பன்னாட்டு நிறுவனங்களின் உரம், பூச்சிக் கொல்லிகளை வயல் வெளிகளில் கொட்டியதன் விளைவு உணவுப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் முற்றிலும் விஷமாக மாறிவிட்டன.

வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், விஷமான உணவுப் பொருள்கள் இவை இரண்டும் தான் ஒவ்வொரு வரையும் நோயாளியாக மாற்று கிறது. இதில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டும். விஷப் பொருள்களை தவிர்ப்பதற்கு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து சாப்பிடலாம்.

குழந்தைகளை காலையில் எழுந்தது முதல் படி, படி என்று சொல்லி இயந்திரம் போல் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். போட்டியான உலகை சந்திக்க வேண்டியுள்ளது ஒருபுறம் இருந்தாலும், இயற்கையைவிட்டு மிக அதிகமான தெலைவுக்கு சென்று கொண்டிருக்கிறோம். இதனால் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியது வரும் என்பது உண்மை.

பாரதியார் பாப்பா பாடலில், ‘காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு, என்று வழக்கப்பபடுத்திக் கொள்ளு பாப்பா’ என்கிறார். பாரதியாரின் இப்பாடத்திட்டத்தை பின்பற்றினால் நோய் வராது. காலை எழுந்தவுடன் கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்க்கையில் ஒரு பகுதி தான் படிப்பு.

இப்படிப்பட்ட சிந்தனைகளை மனதில் ஏற்றினால் தேவையற்ற பதற்றம், நோய்களை குறைக் கலாம். இவைகளை பின்பற்றி ஆரோக்கியமான சமுதாயத்தை, குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றார்.

மருத்துவர்கள் சாம் சி போஸ், எஸ்.ஏகநாதபிள்ளை, பொதுச் செயலர் கே.சந்திரசேகரன், பொருளாளர் ஆர்.செல்வன் உள்ளிட்டோர் பேசினர். எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in