Published : 21 Mar 2020 08:33 AM
Last Updated : 21 Mar 2020 08:33 AM

ஜல்லிக்கட்டை மீட்க போராடிய அம்பலத்தரசு மரணம்

சிவகங்கை

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க தொடர்ந்து 10 ஆண்டுகளாக போராடிய தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிறுவனர் அம்பலத்தரசு (84), நேற்று உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு 2007-ம் ஆண்டு நீதிமன்றம் தடைவிதித்தது. ஜல்லிக்கட்டுத் தடையை நீக்க வலியுறுத்தி ஆங்காங்கே ஒரு சிலர் மட்டுமே குரல் கொடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெரிய அளவில் ஆதரவை திரட்ட வேண்டும் என்றுமுடிவு செய்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச்சங்க நிறுவனர் அம்பலத்தரசு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை மாநிலம் முழுவதும் ஒருங்கிணைத்தார்.

இதற்காக இவர் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நடத்தியதுடன் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தார்.

அவரது முயற்சியின் விளைவாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகே சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது.

சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த அம்பலத்தரசு, திருப்பத்தூரில் உள்ளதனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x