

விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் தமிழ கத்தில் 880 மலேசியர்கள் தாய் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
மலேசியாவில் இருந்து இந்தி யாவுக்கு கடந்த சில மாதங் களுக்கு முன்பு சுற்றுலா, சொந்த ஊர் வருகை, சிகிச்சை மற்றும் ஆன்மிக பயணம் என ஆயிரத் துக்கும் அதிகமான மலேசியர்கள் வந்துள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியா வரும் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்தியா வந்த மலேசியர்கள் சொந்த நாடு திரும்ப வழி யில்லாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், தங்களை தாய கம் அனுப்ப நடவடிக்கை வேண் டும் என்று சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் நேற்று 300-க்கும் மேற்பட்ட மலேசி யர்கள் கையில் விசா, விமான பயண அட்டைகளுடன் கூடினர். இதுதொடர்பாக மலேசிய குடி யுரிமை பெற்ற சென்னையைச் சேர்ந்த சுமதி என்பவர் கூறும் போது, “விமானங்கள் திடீர் என ரத்து செய்யப்பட்டதால் எங் களை தாய்நாட்டுக்கு திரும்ப அனுப்பக்கோரி தூதரகத்துக்கு வந்தோம். ஆனால், அதிகாரிகள் சந்திக்க மறுத்துவிட்டனர். குழந் தைகளை விட்டுவிட்டு அவசர வேலையாக வந்தவர்கள் உட்பட பலர் இங்கு தவிக்கிறோம். சென்னையில் தங்குவதற்கான ஓட்டல் செலவால் நிதிநெருக்கடி அதிகரித்துள்ளது. எனவே, மலேசிய அரசும் இந்திய அரசும் எங்களுக்கு உதவ வேண்டும். மேலும் தமிழகத்தில் தங்கு வதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக மலேசிய தூதரக அதிகாரி ஒருவர் கூறியது: இந்தியாவில் அதிகபட்சமாக சென்னையில் 450 பேர், திருச் சியில் 430, டெல்லியில் 97, பெங்களூரில் 63, மும்பையில் 24, கொச்சியில் 11 பேர் என மொத்தம் 1,075 மலேசியர்கள் உள்ளனர். அவர்களை மீண்டும் தாயகம் கொண்டுவர மலேசிய அரசு தயாராக உள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
ஏனென்றால், ஒருவேளை இவர்களை மலேசியாவுக்கு அனுப்பிய பின்னர், அதில் யாருக் காவது பாதிப்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்கள் இந்தியாவில் எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தனர் என்று ஆய்வு செய்ய முடியாது. அதனால், பரி சோதனை காலகட்டமான மார்ச் 31-ம் தேதிவரை வெளி நாட்டவர்களை வெளியேற்ற மத்திய அரசு தயாராக இல்லை.
தற்போது இந்தியாவில் இருக் கும் மலேசியர்களுக்கு உதவுவது குறித்து மலேசிய மற்றும் இந்திய அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விரைவில் மலேசியர்கள் தாயகம் அழைத்து செல்லப்படுவார்கள். எனவே, மலேசியர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதேபோல், சென்னையில் இருக்கும் மலேசியர்கள் ஏதே னும் உதவி வேண்டும் என்றால், (91 44) 2433 4434/35/36 என்ற என்ணியிலும் mwchennai@kln.gov.my. மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம். இவ் வாறு அவர் தெரிவித்தார்.