Published : 21 Mar 2020 07:31 AM
Last Updated : 21 Mar 2020 07:31 AM

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை ஜியோ பென்சிங் தொழில்நுட்பத்தால் கண்காணிக்கலாம்: நோய் பரவலை தடுக்க ஐபிஎஸ் அதிகாரி ரோகித் நாதன் யோசனை

ஜியோ பென்சிங் தொழில்நுட்பம் மூலம் கரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டவர்களை கண் காணித்து நோய் பரவலை தடுக்க முடியும் என்று தமிழக ஐபிஎஸ் அதிகாரி ரோகித் நாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் இணைந்த அம்சம்தான் ஜியோ பென்சிங். தமிழில் ‘புவிப்பரப்பு வேலி’ என்று அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ரேடியோ அலைக்கற்றைகளை பயன் படுத்தி குறிப்பிட்ட பகுதியை அல்லது ஒரு தனிபட்ட நபரை தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதற்கான பரப்பளவு எல்லையை நாமே தீர்மானித்து கொள்ளலாம். உதாரணமாக ஒரு கப்பல் கடலில் பயணிக்கும்போது வழிதவறினால், ‘ஜியோ பென்சிங்’ மூலம் அதை சுட்டிக்காட்டி வழிகாட்ட முடியும். இதேபோல் அலுவலகம், வீடு களில் புதிய நபர்கள் நுழைவதை கண்டறிதல் போன்ற பல்வேறு வகை பயன்பாடுகளை இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மேற் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அசாதாரண சூழலை சமாளிக்க இந் தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந் நிலையில் அதிநவீன தொழில்நுட் பங்களான செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜியோ பென்சிங் உதவி கொண்டு கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று தமிழக ஐபிஎஸ் அதிகாரி ரோகித் நாதன் தெரிவித்துள்ளார். தற்போது சிவகங்கை மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்து வரும் இவர், இந்த செயல்திட்டத்தை அமல் படுத்த அனுமதி கோரி அதற்கான அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்தில் சமர்பித்துள்ளார்.

செல்போன் வழியாக...

இதுதொடர்பாக ஆர்.ரோகித் நாதன் கூறியதாவது:

‘ஜியோ பென்சிங்’ போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட் பங்களின் உதவிகொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்துதல், குற் றங்கள் நடப்பதை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும். தற்போது கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலாக மாறிவிட்ட சூழலில் தொழில்நுட்பங்களின் உதவியை பயன்படுத்துவதே சிறந்த முடிவாக இருக்கும். அதன்படி, வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்ட றியப்பட்டால் ஜியோ பென்சிங் மூலம் அவரின் செல்போன் வழி யாக கண்காணித்தால் நோய் பாதிப்புக்கு முந்தைய நாட்களில் எங்கெல்லாம் சென்றிருக்கிறார், யாரையெல்லாம் சந்தித்துள்ளார் என்பதுபோன்ற தரவுகளை எளி தாகப் பெற முடியும்.

இதன்மூலம் சம்பந்தப்பட்ட பகுதி களில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய் தல் உள்ளிட்ட பணிகளை துரித மாகச் செய்ய முடியும். அதில் யாருக்கேனும் வைரஸ் தொற்றுக் கான அறிகுறிகள் இருந்தால் இந்த செயல்திட்டத்தின் கீழ் அவர் களையும் கொண்டு வரவேண்டும். ஏனெனில், பாதிக்கப்பட்ட நபரிடம் விசாரிக்கும்போது சில நேரங்களில் அச்சத்தில் தவறான தகவல்களை தந்துவிடும் நிலை உள்ளது. இவை பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

அலைக்கற்றை கோபுரங்கள்

அதனால் இன்றைய அவசர சூழலை சமாளிக்க சுகாதார நட வடிக்கைகளுடன், தொழில்நுட்ப அம்சங்களையும் பயன்படுத்தினால் வெகுவிரைவில் நோய் பரவல் கட்டுப்படுத்தப்படும். ஸ்மார்ட் போன் மட்டுமின்றி இணையதள வசதியற்ற சாதாரண செல்போன் களையும் அலைக்கற்றை கோபு ரங்கள் வழியாக கண்காணிக்க முடியும். அதேநேரம் தனிபட்ட மக்களின் சுதந்திரத்துக்கும் நோய் பாதிப்பில்லாதவர்களுக்கும் எவ்வித சிரமும் ஏற்படாது. பாதிக்கப்பட்ட நபர்களின் முந்தைய 15 நாட்களின் செயல்பாடுகள் மற்றும் சென்ற இடங்களின் துல்லியமான விவரங் களை கண்டறிந்து அடுத்தகட்ட பணிகளை செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

நாடு முழுவதும் இந்த செயல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசிடம் அறிக்கை சமர்பித்துள் ளேன். அனுமதி கிடைத்தபின் இப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், இதற்கான கட்டமைப்பு களை ஒருமுறை உருவாக்கி விட்டால் இப்போது மட்டுமின்றி எதிர்காலத்தில் வரக்கூடிய பேரி டர்களை சமாளிக்கவும் உதவி யாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சீனா, ஜப்பான், இஸ்ரேல், மலே சியா உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பயன் படுத்தப்படுவது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x