

புதுச்சேரியில் விழிப்புணர்விற்காக சலுகையில் சிக்கன் விற்பதாக அறிவிக்கப்பட்டு கூட்டம் அதிக அளவில் கூடியதால் வருவாய் அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்தனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஜெபராஜ் நகரில் கோழிக்கறி கடை செயல்பட்டு வருகிறது. கோழிக்கறி சாப்பிட்டால் கரோனா நோய் வராது என்ற விழிப்புணர்வுக்காக இந்த கடையில் சிறப்பு சலுகையுடன் கோழி இறைச்சி விற்பனை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை பார்த்து நூற்றுக்கணக்கானோர் கடை முன்பு இன்று கூடினார்கள். தகவல் அறிந்து தாசில்தார் செந்தில்நாதன் தலைமையில் போலீஸார் அங்கு விரைந்து வந்து கூட்டம் இச்சூழலில் கூட்டம் க்கூடாது என்று அறிவுறுத்தினர்.
கூட்டம் கூடுவதால் கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் இந்த மாதிரி சலுகையில் விற்பனை செய்து கூட்டத்தை கூட்டக்கூடாது என அவர்கள் அறிவித்தனர்.
ஒருக்கட்டத்தில் கூட்டம் அதிகரித்ததால் விற்பனையும் தடுத்து நிறுத்தினார்கள். இதனையடுத்து கடைக்கு வருவாய் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அங்கு கூடியிருந்த கூட்டத்தை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.