ஹாட் லீக்ஸ்: சிவகங்கைக்குத் தயாராகும் ஸ்ரீநிதி!

ஹாட் லீக்ஸ்: சிவகங்கைக்குத் தயாராகும் ஸ்ரீநிதி!
Updated on
1 min read

சென்னை முட்டுக்காடு நில பரிவர்த்தனை தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது வருமானவரி துறை தொடர்ந்த வழக்கு, மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் தங்களுக்கு பாதகமான தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கிறதாம் கார்த்தி தரப்பு. ஒருவேளை, அப்படி தீர்ப்பு வந்து தனது எம்பி பதவிக்கு ஆபத்து வந்தால் அதைச் சமாளிக்க இப்போதே தனது மனைவி டாக்டர் ஸ்ரீநிதியைத் தயார்படுத்துகிறாராம் கார்த்தி.

அதற்காகவே, தேர்தல் சமயத்தில் மட்டுமே சிவகங்கை தொகுதிப்பக்கம் வந்து தலைகாட்டிச் சென்ற ஸ்ரீநிதி, இப்போது அடிக்கடி தொகுதிப்பக்கம் தென்படுகிறார். மார்ச் 8-ம் தேதி காரைக்குடியிலும் 9-ம் தேதி சிவகங்கையிலும் மகளிர் தின விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிய அவர், மாமனாரும் கணவரும் செல்ல வேண்டிய திருமண நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் தலைகாட்டிச் சென்றார்.

- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 22, 2020)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in