Last Updated : 20 Mar, 2020 09:32 AM

 

Published : 20 Mar 2020 09:32 AM
Last Updated : 20 Mar 2020 09:32 AM

கரோனா வைரஸ் அச்சத்தால் போக்குவரத்து கழகத்துக்கு தினமும் ரூ.16 லட்சம் இழப்பு

மதுரை

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்டத்துக்கு தினமும் ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழக மதுரைக் கோட்டத்தில் மதுரை மண்டலத்தில் 951 பஸ்கள், விருதுநகர் மண்டலத்தில் 418, திண்டுக்கல் மண்டலத்தில் 898 பஸ்கள் என மொத்தம் 2167 பஸ்கள் உள்ளன. இதில் 881 பஸ்கள் தொலை தூரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

கரோனா வைரஸ் பரவு வதைத் தடுப்பதற்காக பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளன. இந்த விடுமு றையைப் பயன்படுத்தி மக்கள் வெளியூர் பயணங்களையும், சுற்றுலாச் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதன் காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்வோர் எண் ணிக்கை கடந்த இரு நாட்களாக 40 சதவீதம் குறைந்துள்ளது. கூட்டம் குறைந்ததையடுத்து நேற்றும், நேற்று முன்தினமும் சுமார் 240 தடங்கள் குறைக்கப்பட்டன.

இதனால் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மண்டலங்கள் அடங்கிய அரசு போக்குவரத்து கழக மதுரைக் கோட்டத்துக்கு தினமும் ரூ.16 முதல் ரூ.18 லட் சம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. ஓட்டுநர், நடத்துநர்க ளுக்குக் கேட்டவுடன் விடுமுறை வழங்கப்படுகிறது. பயணிகள் எண் ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இன்று முதல் 40 சதவீத தடங்கள் குறைக்கப்பட்டு, மார்ச் 31 வரை தேவைக்கு ஏற்ப பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக் கப்படுகின்றன.

இருப்பினும் கரோனா பீதியால் பயணிகளின் எண்ணிக்கை வரும் நாளில் மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

மதுரையில் அனைத்து பஸ் நிலையங்களையும் இணைத்து இயக்கப்படும் இரவு நேர பஸ்களின் எண்ணிக்கை 50 சத வீதம் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் தேவை க்கு ஏற்ப இரவு நேர பஸ்கள் இயக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x