Published : 20 Mar 2020 08:32 AM
Last Updated : 20 Mar 2020 08:32 AM

திருச்சி மாவட்டத்தில் யாருக்கும் ‘கரோனா' பாதிப்பு இல்லை: அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் கடைபிடிக்க ஆட்சியர் வேண்டுகோள்

திருச்சி மாவட்டத்தில் யாருக்கும் ‘கரோனா' பாதிப்பு இல்லை என ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள் ளார்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக் கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

திருச்சி மாவட்டத்தில் கரோனா வைரஸால் சிலர் பாதிக்கப் பட்டுள்ளதாக வரும் தகவல் வதந்தி. மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. பரி சோதனைக்கு அனுப்பப்பட்ட சளி மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் அனைத்தும் நெகடிவ் என்றுதான் வந்துள்ளன.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தனி சிகிச்சை பிரிவில் 11 பேரும், கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்தில், வெளிநாட்டில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய 28 பயணிகளும் தங்க வைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த 2 இடங்களிலும் 24 மணிநேரமும் சுழற்சிமுறையில் பணியாற்ற தனித்தனி மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கள்ளிக்குடி மையத்தில் உள்ளவர்கள் 48 மணி நேர கண்காணிப்புக்குப் பிறகு, நோய் அறிகுறி இல்லையெனில் வீட்டுக்கு அனுப்பப்படுவர். வீட்டுக்குச் சென்றாலும் 14 நாட்கள் தனித்து இருக்கவும், காய்ச்சல்- சளி- மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வீட்டுக்குச் செல்வோரைத் தொடர்ந்து, கண்காணிக்க சுகாதாரத் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அறிவுறுத்தலின்படி மக்கள் தேவையின்றி வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டாம். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். அரசின் அறிவுறுத்தல்களையும், கட்டுப் பாடுகளையும் மக்கள் கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால் கரோனா வைரஸ் பரவும் சாத்தியக்கூறு இல்லை. கரோனா வைரஸ் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது மருத்துவமனை முதல்வர் வனிதா, குடிமுறை மருத்துவ அலுவலர் ஏகநாதன் உட்பட மருத்துவர்கள் உள்ளிட் டோர் உடனிருந்தனர். தொடர்ந்து, கள்ளிக்குடி மத்திய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு மையத்திலும் ஆட்சி யர் சு.சிவராசு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, கள்ளிக் குடி கரோனா வைரஸ் தொற்று கண்காணிப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 28 பேரையும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, அனைவரும் நலமுடன் இருப்பதாக உறுதி செய்தனர். பின்னர், நேற்று இரவு அனைவரும் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x