

கரோனா தடுப்பு நடவடிக்கையாக சதுரகிரிக்கு பக்தர்கள் வருவதற்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்களில் அமாவாசைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த மாதம் வரும் 21 முதல் 24 வரை அமாவசைக்கு சதுகரி செல்ல பக்தர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக சதுரகிரிக்கு பக்தர்கள் வருவதற்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனை கோயில் இணை ஆணையர் விஸ்வநாதன் மற்றும் மாவட்ட வன அலுவலர் முகமது சபாப் ஆகியோர் அறிவித்தனர்.
தமிழகம் முழுவதுமே கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் கண்காணிப்புக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காய்ச்சல், சளி உள்ளவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
தஞ்சை பெரிய கோயில் நேற்று கரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டது. இந்நிலையில், இன்று சதுகிரி சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் கோயில்களுக்கு பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.