

தமிழ்நாட்டில் புதிய சிஜிஹெச்எஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுமா என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு வைகோ எழுத்துபூர்வமாக, "சிஜிஹெச்எஸ் எனப்படும் மத்திய அரசின் உடல் நலத்திட்டத்தின் கீழ் நாடு முழுமையும் எத்தனை மருந்தகங்கள், நல மையங்கள் உள்ளன. மாநில வாரியான பட்டியல் தருக. புதிய மருந்தகங்களை அமைப்பதற்கான விதிமுறைகள் என்ன? இந்தத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில், எத்தனை தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன? பெருகி வரும் தேவைகளுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் புதிய மருந்தகங்களை அரசு நிறுவுமா?" ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.
வைகோவின் கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே எழுத்துபூர்வமாக அளித்த விளக்கம்:
"புதிய மருந்தகங்களை நிறுவிடுவதற்கான அளவுகோல், குறிப்பிட்ட ஊரில் ஏற்கெனவே இத்தகைய மையம் இருந்தால், குறைந்தது புதிதாக 2,000 அட்டைதாரர்கள் இருந்தால் மட்டுமே புதிய கிளை நிறுவிட முடியும்.
இந்தத் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்ற ஊரில், அதை நீட்டிக்க, விரிவுபடுத்த, குறைந்தது 6,000 பேர் அட்டை வைத்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில், 33 மருத்துவமனைகளும், 6 ஆய்வகங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் புதிய மருந்தகங்களை அமைப்பது குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்தத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள்
1. சிஎஸ்ஐ கல்யாணி பொது மருத்துவமனை, மயிலாப்பூர்,
2. சிஎஸ்ஐ ரெய்னி மருத்துவமனை, சென்னை
3. மியாட் மருத்துவமனை, மணப்பாக்கம், சென்னை
4. நோபிள் மருத்துவமனை, புரசைவாக்கம், சென்னை
5. சௌந்தரபாண்டியன் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனை, அண்ணாநகர், சென்னை
6. சுகம் மருத்துவமனை, திருவொற்றியூர், சென்னை
7. ஃபிரண்டியர் லைஃப்லைன் மருத்துவமனை, முகப்பேர் மேற்கு, சென்னை
8. பார்வதி ஆர்த்தோ மருத்துவமனை, குரோம்பேட்டை சென்னை
9. காவேரி புற்றுநோய் மருத்துவமனை, மயிலாப்பூர், சென்னை
10. கே.கே.ஆர் காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை, கீழ்பாக்கம், சென்னை
11. டிரினிடி அக்யு கேர் மருத்துவமனை, கீழ்பாக்கம், சென்னை
12. பில்ரோத் மருத்துவமனை, செனாய் நகர், சென்னை
13. இந்து மிஷன் மருத்துவமனை, தாம்பரம் மேற்கு, சென்னை
14. அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை, நந்தனம், சென்னை
15. மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி
16. புதுவை மருத்துவ அறிவியல் மையம், கணபதிசெட்டிகுளம், புதுச்சேரி
17. மகாலெட்சுமி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல், சென்னை.
சிறப்பு கண் மருத்துவமனைகள்
1 முதல் 4 வரை. டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, பெரம்பூர், தாம்பரம், போரூர்
5. உதி கண் மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை
6. உமா கண் மருத்துவமனை, அண்ணா நகர், சென்னை
7. அரவிந்த் கண் மருத்துவமனை, தவளகுப்பம், புதுச்சேரி
8. டிஆர்ஆர் கண் மருத்துவமனை, பூவிருந்தவல்லி, சென்னை
9. ஜோதி கண் மருத்துவமனை, புதுச்சேரி
10. ராதா திரிநேத்ராலயா, தியாகராய நகர், சென்னை
11. டாக்டர் அரவிந்த் கண் மருத்துவமனை, முகப்பேர் மேற்கு, சென்னை
12. நிர்மல் கண் மருத்துவமனை, தாம்பரம் மேற்கு, சென்னை
13.ராஜன் கண் மருத்துவமனை, தியாகராய நகர், சென்னை
14. டாக்டர் அகர்வால் மருத்துவ மையம், ராஜீவ் காந்தி சதுக்கம், புதுச்சேரி
பல் மருத்துவமனைகள்
1. டாக்டர் குப்தா பல் சிறப்பு மருத்துவமனை, புரசைவாக்கம், சென்னை
2. டாக்டர் ரிமோ பல் சிறப்பு மருத்துவமனை, ஆவடி, சென்னை
நோய் முதல் நாடும் ஆய்வகங்கள்
1. பிராம்ப்ட் பிரிசைஸ் ஆய்வகம், ஆவடி, சென்னை
2. ஆண்டர்சன் ஆய்வகம், புரசைவாக்கம், சென்னை
3. ஆர்த்தி ஸ்கேன்ஸ், வடபழநி, சென்னை
4. சங்கரா ஆய்வகம், அபிராமபுரம், சென்னை
5. விஆர்ஆர் ஆய்வகம், தியாகராய நகர், சென்னை
6. பாரத் ஸ்கேன்ஸ், இராயப்பேட்டை, சென்னை"
என அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.