

சிபிஐ கூடுதல் இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் நியமிக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ-யின் கூடுதல் இயக்குநராக வியாழனன்று பொறுப்பேற்றார்.
ஆனால், உரிய விதிகளைப் பின்பற்றாமல், சிபிஐயில் பொறுப்பேற்றிருப்பதாகக் கூறி தமிழக அரசு அர்ச்சனா ராமசுந்தரத்தை சஸ்பெண்ட் செய்தது.
மேலும், தமிழக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா மத்திய உள் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "அர்ச்சனா ராமசுந்தரம் விதிகளைப் பின்பற்றாமல் சிபிஐ பணியில் சேர்ந்துள்ளார். அவரை தகுதி நீக்கம் செய்து மாநில அரசுப் பணிக்கு உடனே திருப்பி அனுப்ப வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அர்ச்சனா ராமசுந்தரம் சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமிக்கப்படுவதை எதிர்த்து பத்திரிகையாளர் வினித் நரேன் இந்த நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அர்ச்சனா ராமசுந்தரம் ஜூலை 14ம் தேதி வரை சிபிஐ கூடுதல் இயக்குநராக பணியாற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.