Published : 19 Mar 2020 09:29 AM
Last Updated : 19 Mar 2020 09:29 AM

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்: ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவர் விக்ரம்குமார் அறிவுரை

திருப்பத்தூர்

உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக தப்பிக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன என ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத் துவப்பிரிவு தலைமை மருத்துவர் விக்ரம்குமார் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றில் இருந்து எளிதாக தப்பிக்க சித்த மருத்துவத்தில் சில வழிமுறைகள் உள்ளன என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவின் தலைமை மருத்துவர் விக்ரம்குமார், ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது, "சித்த மருத்துவம் கூறும் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்று வது இப்போதுள்ள சூழலில் அதிக பயன்களை கொடுக்கும். கரோனா வைரஸ் தொற்று என்பது பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தனிநபர் சுகாதாரத்தை பேணிக் காப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளியில் இருந்து வீடு திரும்பியதும் கைகளை நன்றாக கழுவ வேண்டும். இந்த பழக்கத்தை எப்போதும் பின்பற்ற வேண்டும். அதேபோல மஞ்சள் கரைத்த நீர் அல்லது படிகாரம் கரைத்த நீரை பயன்படுத்தலாம்.

கைகளை கழுவ வேண்டும்

கைக்குட்டைகளை மஞ்சள் கரைத்த தண்ணீரில் ஊறவைத்து அதை உபயோகிக்கலாம். அடிக் கடி கைகளை கழுவ வேண்டும். வீடு, அலுவலகம் பகுதிகளை எப்போதும் தூய்மையுடன் வைத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் கலந்த நீர், திருநீற்றுப் பச்சிலை, நொச்சி, கற்பூரவள்ளி ஊறிய நீரை வீடு மற்றும் வெளிப்பகுதிகளில் தெளிக்கலாம்.

மிளகு, மஞ்சள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பொருட் களை நம் உணவுடன் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இலவங்கம்பட்டை, அன்னாசிப்பூ, சுக்கு, கிராம்பு ஆகிய நறுமணமூட்டும் மருத்துவ பொருட்களை சிறிதளவு எடுத்து குடிநீராக காய்ச்சி அதை தினசரி குடிக்கலாம்.

இஞ்சி தேநீர், சுக்கு கசாயம், மிளகு ரசம், தூதுவளை துவையல், புதினா சட்னி, சின்ன வெங்காயம், மிளகுத்தூவிய பழ ரகங்கள், நெல்லிக்காய் போன்ற உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு கொடுக்கும். அதேபோல, கீரை வகைகளை அதிகமாக பயன்படுத்தலாம்.

சளி, இருமலை கட்டுப்படுத்தும் ஆடா தொடை மணப்பாகு, கபசுரக்குடிநீர், தாளிசாதி சூரணம், அதிமதுர சூரணம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். மருந்து களை பயன்படுத்த சித்த மருத்து வரின் ஆலோசனை முக்கியம்.

ஏசியை தவிர்க்கவும்

சூரிய வெளிச்சம் வீட்டினுள் விழும்படி ஜன்னல், கதவுகளை திறந்து வைக்க வேண்டும். இரவில் ஏசியில் உறங்குவதை தவிர்க்கலாம். சுவாசப்பாதையை சுத்தப் படுத்த ஆவி பிடிக்கும் முறையை மேற்கொள்ளலாம். மூச்சுப்பயிற்சியும் முறையாக செய்யலாம். இவையெல்லாம் தற் போதுள்ள சூழ்நிலைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தால் அவர் களை தனிமைப்படுத்தலாம். இது அனைவருக்கும் நன்மை தரும். இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தயங்காமல் அரசு மருத்துவமனை களுக்கு சென்று பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால், அது கரோனா வைரஸ் தொற்றுக் கான அறிகுறி என யாரும் அச்சம் அடைய வேண்டாம்.

கரோனா வைரஸ் தொற்று மட்டுமின்றி அனைத்து விதமான வைரஸ் தொற்றின் பிடிகளில் இருந்து தப்பிக்க சித்த மருத்துவத்தின் நோய் தடுப்பு முறைகளோடு அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொண்டால் எந்த விதமான வைரஸ் தொற்றும் நம்மை பாதிப்படைய செய்யாது, தொற்றில்லா தமிழ்நாடு உருவாக மக்கள் தேவையான நடவடிக் கைளை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x