சசிபெருமாள் சொந்த ஊரில் 3-வது நாளாக உண்ணாவிரதம்

சசிபெருமாள் சொந்த ஊரில் 3-வது நாளாக உண்ணாவிரதம்
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை மூட வலி யுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தினால் மட்டுமே சசிபெருமாளின் உடலை வாங்குவோம் எனக்கூறி அவரது குடும்பத்தினர் ஆதரவாளர்கள் சசிபெருமாள் சொந்த ஊரில் உண்ணாவிரதம் இருந்து வரு கின்றனர்.

நேற்று 3-வது நாளாக தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி சசிபெருமாளின் மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி மற்றும் உறவினர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.

இதற்கிடையில் சசிபெருமா ளின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பது குறித்து அரசு தரப்பில் எந்தவொரு பேச்சு வார்த்தையும் சசிபெருமாள் குடும் பத்தினரிடம் நடத்தப்படவில்லை.

சேலம் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் மட்டும் அவ்வப்போது சென்று சசிபெருமாள் மனைவி, மகன்களிடம் உடலை பெற்றுக் கொள்ளும்படி கூறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in