Published : 19 Mar 2020 07:38 AM
Last Updated : 19 Mar 2020 07:38 AM

கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை- மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மக்கள் குறைதீர் கூட்டம் உட்பட மக்கள் அதிகம் கூடும் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளும் வரும் 31-ம் தேதி வரையில் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

கரோனா வைரஸ் தடுப்புநடவடிக்கையாக செங்கல்பட்டுமாவட்ட அரசு அலுவலர்களுக்குகாட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம்பல்கலைக்கழகத்தில் மார்ச் 21-ம்தேதி நடைபெறுவதாக இருந்த விளையாட்டுப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் காணப்பட்ட 67 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை கண்காணிக்க 5 துணை ஆட்சியர் குழுஅமைக்கப்பட்டுள்ளது என மாவட்டஆட்சியர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று தொடர்பானதகவல் தெரிவிக்க மக்கள் 044 -27427412 மற்றும் 044 - 27427414ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் மற்றும் திருப்போரூர் பகுதிகளில் பேருந்து நிலையங்களிலும், பேருந்துகளிலும் சுகாதாரத் துறை சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே பயணிகள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். கந்தசுவாமி கோயில்களுக்கு வரும் மக்கள் உள்ளே செல்லும் முன்பு கைகளை திரவம் கொண்டு சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மாமல்லபுரத்தில் கலைச்சின்னங்களை கண்டு ரசிக்க ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், நுழைவு பகுதியில் உள்ள கதவுகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

காஞ்சியில் 41 பேர் கண்காணிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் மார்ச் 19-ம் தேதி நடைபெறஇருந்த மனித உரிமைகள் தினவிழாவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரம் நகரின் பல்வேறுபகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் வாகனங்களை நிறுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள 41 பேருக்கு `கோவிட்-19' அறிகுறிகள் உள்ளதா என சுகாதாரத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கை கழுவ விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்டத்தில் இம்மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம், அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் உட்பட அனைத்து கூட்டங்களும் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

தமிழக-ஆந்திர எல்லையோர முக்கிய சாலைகளில் பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூண்டி, பென்னல்லூர்பேட்டை, கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆந்திர எல்லையோர கிராமங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல், மக்கள் மத்தியில் கை கழுவுதலின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட்டரைப்பெரும்புதூர் சுங்கச்சாவடியில் நடைபெற்ற கரோனாவைரஸ் தடுப்பு மருத்துவ முகாம்,வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆட்சியர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆவடி மாநகராட்சி அலுவலகம், சென்னை பெருநகர காவல்துறையின் அம்பத்தூர் துணை ஆணையர் அலுவலகம் உள்ளிட்டஇடங்களில் மக்களுக்கு கை கழுவும்திரவத்தை கொண்டு கைகளைசுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x