Published : 16 Aug 2015 10:08 AM
Last Updated : 16 Aug 2015 10:08 AM

பூரண மதுவிலக்கு கோரி சசிபெருமாள் மகன் விவேக் உண்ணாவிரதம்: தந்தை வழியில் போராட்டம் தொடருவதாக அறிவிப்பு

காந்தியவாதி சசிபெருமாளின் மகன் விவேக், அவரது தந்தை வழியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டம், இடங்கண சாலை, மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த சசிபெருமாள், தமிழகத் தில் பூரண மதுவிலக்கு வேண்டி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், கடந்த ஜூலை 31-ம் தேதி கன்னியாகுமரி மாவட் டம், உண்ணாமலை கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி, செல்போன் கோபுரத் தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டபோது உயிரிழந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்த அவரது மகன் விவேக், மேட்டுக்காட்டில் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் அரசியல் கட்சி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று சசிபெருமாள் உடலை பெற்று அவரது சொந்த ஊரில் அண்மையில் அடக்கம் செய்தனர்.

நேற்று சசிபெருமாளின் சொந்த ஊரில், அவரது சமாதி அருகே உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சுதந்திர தின விழா கொண்டாடினர். சசிபெருமாளின் சகோதரர் செல்வம், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சசிபெருமாளின் மூத்த மகன் விவேக், தந்தை வழியில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியு றுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளார். முதல்கட்டமாக நேற்று தனது தந்தை சமாதி அருகே ஒரு நாள் அடையாள உண் ணாவிரதத்தை மேற்கொண்டார்.

நேற்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணா விரதம் இருந்த விவேக்குக்கு, சசிபெருமாளின் மகள் கவியரசி பழரசம் அளித்து, போராட்டத்தை முடித்து வைத்தார்.

இதுகுறித்து விவேக் கூறும் போது, ‘‘தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி தந்தை போராடியதை போன்று தொடர்ந்து நானும் போராடவுள்ளேன். முதல்கட்டமாக நேற்று (15-ம் தேதி) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன். அடுத்தடுத்து, பல் வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன்’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x