புதுச்சேரியில் பூங்கா, ஆசிரமம், படகு குழாம் ஆகியவற்றை 31-ம் தேதி வரை மூட ஆட்சியர் உத்தரவு

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி முழுவதும் உள்ள பூங்காக்கள், ஆசிரமங்கள், படகு குழாம் ஆகியவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பூங்காக்கள், படகு குழாம்களை மூட ஆட்சியர் அருண் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (மார்ச் 18) பிறப்பித்துள்ள உத்தரவில், "பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதுச்சேரியில் உள்ள தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்கள், அரவிந்தர் ஆசிரமம், அருங்காட்சியகம், சுண்ணாம்பாறு படகு குழாம், தேங்காய்த்திட்டு படகு குழாம் ஆகியவை வரும் 31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in