

கரோனா வைரஸ் பரவலை விர அதிவேகமாக அதுகுறித்த வதந்திகள், பொய்ச்செய்திகள், தகவல்கள் சில விஷமிகளால் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் கோயம்பேடு மார்க்கெட் கரோனா வைரஸ் அச்சுறுத்தலையடுத்து மூடப்பட்டது என்ற ஒரு வதந்தி. இது மிகவும் மோசமான வதந்தி, ஏற்கெனவே ஆங்காங்கே சிறு வியாபாரிகள் கரோனா கட்டுப்பாடுகளினால் பாதிப்படைந்துள்ள நிலையில் காய்கறி, பழங்கள் வியாபாரமும் பாதிக்கப்பட்டால் என்ன ஆவது?
இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பழக்கமிஷன் ஏஜெண்டுகள் சங்க தலைவர் எஸ்.சீனிவாசன் ஊடகம் ஒன்றிற்குத் தெரிவிக்கும் போது,
“கோயம்பேடு மார்க்கெட் மூடல் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதில் உண்மையில்லை. வழக்கம்போலவே மார்க்கெட் செயல்படுகிறது. எனவே வியாபாரிகள் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை. பொதுமக்களும் அச்சமடைய தேவையில்லை.” என்றார்.