

மேட்டூர், வைகை, பேச்சிப்பாறை, ஸ்ரீ வைகுண்டம், அமராவதி அணைகளை தூர் வாரும் பணிகள் நடப்பாண்டில் நடக்க உள்ளதாகவும், ஸ்ரீ வைகுண்டம் தவிர மற்ற அணைகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
பொதுப்பணித்துறை நீர்ப்பாசனத்துறை பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2014-15 நிதியாண்டில் நீர்த்தேக்கங்கள் அமைத்தல், ஏரிகள் புனரமைப்பு, அணைகள் தூர் வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிதியாண்டில் பொதுப் பணித்துறையின் பாசனப்பிரிவின் கீழ் ரூ.3207.61 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு உத்தேசித்துள்ளது.
இதில், தமிழக அரசு நிதி மற்றும் நபார்டு வங்கி கடனுதவியில் முன்னுரிமை அடிப்படையில் ரூ.203.51 கோடியி்ல் புதிய வழங்கு வாய்க்கால், தடுப் பணைகள் கட்டுதல், ஏரி, கால்வாய், அணைக்கட்டுகளை புனரமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதில், பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் வெள்ளாற்றின் குறுக்கே ரூ.8.11 கோடியில் அணைக்கட்டு கட்டப்படுகிறது. மேலும், அரியலூர், கோவை, தருமபுரி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக் கோட்டை, சேலம், சிவகங்கை, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர், வேலூர் மாவட்டங்களில் 31 இடங்களில் பல்வேறு ஆறுகளின் குறுக்கே, ரூ.47.17 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. திருச்சி மாவட் டத்தில் மட்டும் 14 தடுப்பணைகள், வாய்க்கால்கள், ஆறுகளி்ன் குறுக்கே கட்டப்படுகின்றன.
இது தவிர நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மொத்தம் 15 இடங்களில் ஆறுகளின் குறுக்கே ரூ.17.10 கோடியில் தளமட்டச் சுவர்கள் கட்டப்படுகின்றன.
மேலும் ஏரிகள், கால்வாய்கள் மற்றும் அணைக்கட்டுகளை புனரமைக்க ரூ.117.10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் விருதுநகரில் உள்ள 105 ஏரிகளை ரூ.50.73 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம், திருவிடை மருதூரில் கீழணையில் கதவு கட்டமைப்புகளை ரூ.10 கோடியி லும், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வைகை ஆற்றின் இடது கரையில் ரூ.4.03 கோடி யில் அணுகு சாலை அமைக் கும் பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றன.
தமிழகத்தின் பெரும்பான்மை யான அணைகள் பழமையானவை என்பதால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இவை நீர்தேங்கும் பகுதிகளில் படிவதால் அணைகளின் கொள்ள ளவு குறைகிறது. தொலை நோக்குத்திட்டம் 2023-ன் கீழ் நீர்த்தேக்கம் மற்றும் அணைகளின் கொள்ளவுகளை மீட்கும் திட்டம் உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் வைகை அணை, கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை, சேலத்தில் மேட்டூர் அணை, திருப்பூரில் அமராவதி அணை, தூத்துக்குடியில் ஸ்ரீ வைகுண்டம் அணைகள் தூர்வாரப்படுகிறது.
இதில் ஸ்ரீ வைகுண்டம் அணைக் கான திட்டஅறிக்கை தயாரிக்கப் பட்டு, பணிகள் 7 பிரிவாக பிரிக்கப்பட்டு, 6 பிரிவுகளுக்கு ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்ற 4 அணைகளுக்கான விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி களை கண்காணிக்க தொழில் நுட்ப ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளதாக, பொதுப் பணித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.