Published : 08 Aug 2015 02:44 PM
Last Updated : 08 Aug 2015 02:44 PM

மறைந்த காவலர் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

விபத்திலும், உடல் நலக் குறைவாலும் மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த சுப்பையா, தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஆறுமுகம், முதல் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த தவசீலன் ஆகியோர் 29.6.2015 அன்று மரக்காணம் வட்டம், ஆலம்பாக்கம் கிராமம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேசன் 1.6.2015 அன்று மாரடைப்பால் காலமானார்.

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த நீலமோகன் 3.6.2015 அன்று சிதம்பரம் புறவழிச் சாலை அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் .

கோயம்புத்தூர் மாநகரம், உக்கடம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்தன் 18.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் .

விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த குமாரசாமி 23.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரக் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த திரு. கலைமணி 23.6.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் .

மதுரை மாநகரம், திருநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த ஜோதிகரன் 1.7.2015 அன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

வேலூர் மாவட்டம், காட்பாடி போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த வாசுதேவன் 2.7.2015 அன்று மாரடைப்பால் காலமானார்.

விருதுநகர் மாவட்டம், வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த இராதாகிருஷ்ணன் 4.7.2015 அன்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்திகளை அறிந்து நான் அதிக துயரம் அடைந்தேன்.

காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுப்பையா, குமாரசாமி, கலைமணி, வாசுதேவன், இராதாகிருஷ்ணன்; தலைமைக் காவலர்கள் ஆறுமுகம், முருகேசன், நீலமோகன், ஆனந்தன், ஜோதிகரன், முதல்நிலைக் காவலர் தவசீலன் ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x