அரசு உத்தரவை மீறி வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் திறந்திருந்தால் நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

அரசு உத்தரவை மீறி வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் திறந்திருந்தால் நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும்: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Updated on
1 min read

தமிழக அரசு உத்தரவை மீறி வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டால் அவற்றுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவிட்-19 பாதிப்பை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து மாநிலத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள், திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவை மார்ச்
31-ம் தேதி வரை மூடப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, அரசின் உத்தரவை பின்பற்றாமல் வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்திருந்தால் அவற்றை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in