

கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலால் புதுச்சேரியில் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் இரு வேளைகளில் மூலிகை சாம்பிராணி புகை போடப்படுகிறது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் முக்கியத் திருக்கோயிலான மணக்குள விநாயகர் கோயிலுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகள் தொடங்கி உள்ளூர் மக்கள் பலரும் தினந்தோறும் சென்று வழிபடுவது வழக்கம்.
சளி, காய்ச்சல் உள்ளோர் கோயிலுக்கு வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பக்தர்கள் பலரும் இக்கோயிலுக்கு வருவது குறைந்துள்ளது.
இச்சூழலில் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோயிலில் காலை, மாலை இருவேளைகளிலும் மூலிகை சாம்பிராணி புகை போடும் பணி இன்று தொடங்கியது. சாம்பிராணி புகை போடுவதால் அசுத்தக் கிருமிகள் அழியும் என்பதால் இச்செயல்பாட்டை தொடங்கியுள்ளதாக கோயில் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
இச்சூழலில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நெற்றில் குங்குமம், விபூதியிட வேண்டாம் என குருக்களுக்கும் கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.