சென்னையில் 194 பேருந்து தட சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன

சென்னையில் 194 பேருந்து தட சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன
Updated on
1 min read

சென்னையில் 194 பேருந்து தட சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு செப்டம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு சென்னையின் பல் வேறு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் சென்னைக்கு வருகை புரிவதால், சாலைகளை மேம்படுத்துவதற் கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக சென்னையில் உள்ள 471 பேருந்து தட சாலைகளுள் 194 சாலைகள் தேர்ந்தெடுக் கப்பட்டன.

ஆளுநர் மாளிகையை ஒட்டி யுள்ள சர்தார் பட்டேல் சாலை, நுங்கம்பாக்கத்தில் சாஸ்திரி பவனை ஒட்டியுள்ள கல்லூரி சாலை, பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஒட்டியுள்ள வாலாஜா சாலை உள்ளிட்ட பல சாலைகள் புதிதாக போடப்பட் டுள்ளன. தார் கலவை சரியாக உள்ளதா, சாலையின் கனம் மற்றும் தரம் உள்ளிட்டவைகளை மேற்பார்வையிட 50 பொறி யாளர்கள் பிரத்யேகமாக நியமிக் கப்பட்டுள்ளனர். இவை 33 ஒப்பந் ததாரர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்திலும், பாந்தியன் சாலையில் உள்ள மேம்பாலத்தி லும் ஏற்கெனவே போடப்பட்ட சாலையை தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “சென்னையில் 140 இடங்களில் தார் சாலை போடும் பணி முடிவடைந்துள்ளது. சாலை ஓரங்களை குறித்தல், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை நுழைவாயில்களை குறித்தல், சாலை தடுப்பான் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இனி மேற்கொள்ளப்படும். மீதமுள்ள 54 சாலைகளிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் முடிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in