

திருநெல்வேலி மாவட்ட காசநோய் துணை இயக்குநர் டாக்டர் வெள்ளச் சாமி கூறியிருப்பதாவது:
தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருந்தகங்கள், ஆய்வகங்கள் தங்களிடம் சிகிச்சை பெறும், மருந்துகள் வாங்கும், காச நோய் பரிசோதனை செய்யும் காச நோயாளிகளின் விவரங்களை அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகும். காசநோயாளிகளின் விவரங் களை அரசுக்குத் தெரியாமல் மறை ப்பது தண்டனைக்குரிய குற்றம்.
காசநோயானது மைக்கோ பாக்டீரியம் டுயூபர்குளாசிஸ் என்ற நுண் கிருமி மூலம் பரவுகிறது. 2 வாரம் தொடர் இருமல், மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை காசநோய்க்கான பொதுவான அறிகுறியாகும். உலக சுகாதார நிறுவனத்தின் வரை யறையின்படி சளிப்பரிசோதனை மூலம் மட்டுமே காசநோய் உறுதி செய்யப்பட வேண்டும்.
ரத்த மாதிரிகள் மூலம் காசநோய் பரிசோதனை செய்வது தடை செய் யப்பட்டுள்ளது. நுண்கதிர் பரி சோதனையை மட்டும் கொண்டு சிகிச்சையை தொடங்க வேண்டாம். நுண்கதிர் பரிசோதனையுடன் சளி பரிசோதனையும் செய்து, காச நோயை உறுதி செய்த பின் சிகிச்சையை தொடங்க வேண்டும்.
அனைத்து காசநோயாளி களுக்கும் ஜீன் எக்ஸ்பர்ட் பரி சோதனை, எச்ஐவி பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை ஆகியவற்றை செய்ய வேண்டும். அனைத்து தனியார் மருத்துவ மனை, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் காசநோயாளி களுக்கு மாதந்தோறும் ஊட்டச்சத்து உதவித்தொகையாக ரூ.500 சிகிச்சை காலம் முழுமைக்கும் வழங்கப்படும்.
காசநோயாளிகளின் விவரங்களை அரசுக்கு முதலில் தெரிவிக்கும் தனியார் மருத்துவ மனை, மருத்துவர்களுக்கு ஒரு நோயாளிக்கு ரூ.1,000 ஒருமுறை வழங்கப்படும். தனியார் மருந்தகங் கள், ஆய்வகங்களுக்கு ஒரு நோயாளிக்கு ரூ.500 ஒருமுறை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.