

மதுரையில் பெண்களுக்கு இலவ சமாக சணல், துணிப்பை தயாரிக்க இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்திய தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பன்னாட்டு மேலாண்மை ஆலோ சனை நிறுவனமான அக்சன்சர் நிறுவனத்தின் சமூக பங்க ளிப்புத் திட்டத்தின் கீழ், வாப்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் மதுரையில் பெண் களுக்கு குறுந்தொழில் தொடங்க இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மதுரை வாப்ஸ் வேளாண் பயிற்சி மையத்தில் மார்ச் 18 முதல் ஒரு மாத பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் இயற்கை வேளாண்மை முக்கியக் கூறுகள், மண் காலநிலைப் பயிர்கள், பூச்சிகள் இவற்றின் இயல்பு பற்றி விளக்கம் அளிக்கப்படும். சாணம் மற்றும் கால்நடை கழிவுகளை ஊட்டமேற்றிய தொழு உரமாகவும், மண்புழு எருவாகவும் மாற்றுதல், பண்ணை வடிவமைப்பு மற்றும் பயிர் மேலாண்மை பற்றிய விளக் கங்கள் அளிக்கப்படும்.
மேலும் பஞ்சகாவ்யா, அமுதக்கரைசல், ஜீவார்மிதம், பூச்சி விரட்டி, இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், ஐந்திலை கரைசல் ஆகி யன தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப் படும். பிளாஸ்டிக்கை அரசு முற்றி லும் தடை செய்துள்ளதால், பெண் தொழில் முனைவோர் சணல் பை மற்றும் துணிப் பைகளைத் தயாரித்து பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
அதனால் இதன் தயாரிப்புப் பொருட்களைத் தேர்வு செய்தல், தயாரித்தல், விற்பனை மேலாண்மை போன்ற துறை பயிற்சியாளர்களைக் கொண்டு செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளிக் கப்படும். வயது 18 முதல் 45 வயதுக் குள்ளும், 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில் இந்திய தொழில் முனைவு மேம்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் சேர விரும்புவோர் திட்ட ஒருங்கிணைப்பாளர், வாப்ஸ் வேளாண் பயிற்சி மையம்,39, பெசன்ட் ரோடு, சொக்கி குளம் (பி.டி.ஆர்.மகால் பின்புறம்), மதுரை- 625 002 என்ற முகவரி யிலோ, 0452-2538641, 8870308420 என்ற எண்களிலோ தொடர்பு கொள் ளலாம் என வாப்ஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனச் செயலாளர் எஸ்.ஏ.அருள் தெரிவித்துள்ளார்.
வயது 18 முதல் 45 வயதுக்குள்ளும், 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்