Published : 16 Mar 2020 08:27 AM
Last Updated : 16 Mar 2020 08:27 AM

கோவிட்-19 பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை; அனைத்து மருத்துவமனைகளிலும் தனி வார்டு: சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அரசாணை வெளியிட்டார்

சென்னை

கோவிட்-19 பாதிப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ஒவ் வொரு மருத்துவமனையிலும் தனி வார்டு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர்பீலா ராஜேஷ் நேற்று வெளியிட்ட அரசாணை:

கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று நோய் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, கோவிட் 19 வைரஸ் தாக்குதலை தேசியபேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கோவிட்-19 பொது சுகாதார சட்டத்தின் கீழ் தொற்றுநோய் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, பல்வேறுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம் ஆகிறது. அதன்படி, கோவிட்-19 அறிகுறி தென்படும் நபர்களை பரிசோதிக்க ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனி அறை அல்லது தனி வார்டு ஏற்படுத்தப்பட வேண்டும்.

அந்த நபர் கோவிட்-19 பாதிப்பு உள்ள ஏதேனும் நாட்டுக்கு பயணம் செய்திருக்கிறாரா என்பதை பதிவு செய்ய வேண்டும். நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் அவரை மருத்துவமனையில் தனி அறையில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கோவிட்-19பாதிப்பு விவரங்களை சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் உடனடியாக சுகாதாரப் பணிகள் இணை இயக்குநருக்கு (சென்னை எனில் நகர சுகாதார அதிகாரிக்கு) தகவல் தெரிவிக்க வேண்டும்.

கோவிட்-19 பரிசோதனையை எந்த தனியார் ஆய்வகங்களும் மேற்கொள்ளக் கூடாது. கோவிட் -19பாதிப்பு உள்ள நாட்டுக்கு கடந்த 28 நாட்களுக்குள் யாராவது சென்று வந்திருப்பின் அத்தகைய நபர் தாமாகவே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுஆஜராக வேண்டும். அத்தகைய நபர் தனக்கு இருமல், காய்ச்சல்,சுவாசிப்பதில் சிரமம் போன்றபிரச்சினைகள் இல்லாவிட்டா லும்கூட குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தம்மை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறியுள்ளார்.

பரவும் அபாயம்

சுகாதாரத்துறை செயலர் நேற்றுவெளியிட்ட இன்னொரு அரசாணையில், கோவிட் 19 வைரஸ் தமிழ கம் முழுவதும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அறிவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x