

‘கோவிட்-19’ வைரஸ் அச்சத்தால் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், துபாய், கொழும்பு, சிங்கப்பூர், குவைத் ஆகிய பகுதிகளுக்கு சென்னையில் இருந்து இயக்கப்படும் சிங்கர் ஏர்லைன்ஸ், இண்டிகோ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, குவைத் ஏர்வேஸ், லூப்தான்சா மற்றும் பாடிக் ஏர் ஆகிய நிறுவனங்கள் தங்களது சேவையை நேற்று ரத்து செய்தன. கடந்த 11 நாட்களில் 90-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.