‘கோவிட்-19’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: சென்னை ஐயப்பன் கோயில்களில் விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள்

கோவிட்-19’ வைரஸ் காரணமாக சபரிமலை செல்வதை தவிர்த்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி 18 படிகள் ஏறி சுவாமியை தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்கள்.
கோவிட்-19’ வைரஸ் காரணமாக சபரிமலை செல்வதை தவிர்த்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி கட்டி 18 படிகள் ஏறி சுவாமியை தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்கள்.
Updated on
1 min read

கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலரும் அருகில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து, விரதத்தை முடித்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் (மலையாள) மாதப் பிறப்பை முன்னிட்டும் நடை திறக்கப்பட்டு, பூஜை நடைபெறும். பங்குனி மாத பூஜைக்காக கோயில் நடை கடந்த 13-ம் தேதி திறக்கப்பட்டது. வரும் 18-ம் தேதி வரை கோயில் திறந்திருக்கும்.

இந்த நிலையில், கேரளாவில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதால், பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்கு மாறு திருவாங்கூர் தேவஸம் சமீபத்தில் அறிவித்தது.

பங்குனி மாதப் பிறப்பு பூஜைக்காக சபரிமலை செல்லும் திட்டத்துடன் ரயில், பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள், தேவஸம் நிர்வாகத்தின் அறிவிப்பு காரணமாக தங்கள் பயணச் சீட்டுகளை ரத்து செய்துவிட்டு, அருகில் உள்ள ஐயப்பன் கோயில்களுக்குச் சென்று, விரதத்தை முடிக்கின்றனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலுக்கு வந்து விரதத்தை நிறைவு செய்கின்றனர்.

சபரிமலை செல்லமுடியாத காரணத்தால் மகாலிங்கபுரம், அண்ணாநகர், கே.கே.நகர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களுக்கும் ஏராளமான பக்தர்கள் இருமுடி எடுத்துச் செல்கின்றனர்.

முகக்கவசம்

இக்கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ‘கோவிட்-19’ வைரஸ்காய்ச்சல் விழிப்புணர்வு காரணமாக, பலரும் முகக்கவசம் அணிந்து வந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in