

திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினர்.
திண்டுக்கல்லில் ரூ.325 கோடி மதிப்பில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர், ரூ.14.9 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 45 புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தார். நீர்வள ஆதாரத் துறை வேளாண்மைத் துறை சார்ப்பில் ரூ.13.85 கோடி செலவில் 4 புதிய திட்டப்பணிகளையும் தொடங்கிவைத்தார்.
ஓராண்டில் தொடங்கப்படும்..
பின்னர் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "வெறும் ஒன்றல்ல, ஒன்றையும் ஒன்றையும் கூட்டி இரண்டல்ல, ஒன்றுக்குப் பக்கத்தில் இன்னொரு 1 சேர்த்து மொத்தம் 11 மருத்துவக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் பெற்றுள்ளோம்.
இதனை தமிழகத்தின் சாமான்ய முதல்வர், எளிய விவசாயியாக இருந்து முதல்வரான எடப்பாடி பழனிசாமி சாத்தியமாக்கியுள்ளார்.
மருத்துவத் துறையில் 15, 20 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே ஆண்டில் முதல்வர் நிறைவேற்றியுள்ளார். புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடம் இன்னும் ஓராண்டில் கட்டி முடிக்கப்படும்" என்றார்.