Published : 13 Mar 2020 09:03 PM
Last Updated : 13 Mar 2020 09:03 PM

கரோனா அச்சம்: தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை

கரோனா அச்சம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்கேஜி, யூகேஜி பள்ளிகளுக்கு வரும் 16-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கேரள எல்லையோர மாவட்டங்களுக்கு 5-ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 81 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்த நிலையில், இன்று விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் அறிவிப்பு:

“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் எல்கேஜி, யூகேஜி, (ப்ரீ கேஜி உட்பட) வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர் , திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 16-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. கரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளும் பொருட்டு இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட வகுப்புகளுக்கு மார்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”.

இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x