முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு 15 மின் மோட்டார்கள் பறிமுதல்

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு 15 மின் மோட்டார்கள் பறிமுதல்
Updated on
1 min read

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட பயன்படுத்தப்பட்ட 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முல்லை பெரியாறு அணை யின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், நீர்வரத்து முற்றிலும் குறைந்துவிட்டது. அணையின் நீர்மட்டம் தற்போது 115.30 அடியாக உள்ளது. இந்த அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கான குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆற்றில் வரும் தண்ணீரை கம்பம் பள்ளத்தாக்கு பெரியாற்று படுகையில் சிலர் மின் மோட்டார் வைத்து திருடி வருகின்றனர். இதனால் வைகை அணைக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தேனி ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து ஆற்றுப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் கதிரேசன் தலைமையில், பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறை யினர் லோயர்கேம்ப் முதல் கூடலூர் காஞ்சிமரத்துறை, கருநாக்க முத்தன்பட்டி, உத்தமபாளையம் வரை உள்ள பெரியாற்றுப் படுகை பகுதிகளில் சோதனை மேற் கொண்டனர்.

இதில் ஆற்றிலிருந்து தண்ணீர் திருட பயன்படுத்தப்பட்ட 15 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். ஆற்றிலிருந்து விளைநி லங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பதிக்கப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in