

பாஜகவில் மட்டுமே சாதாரண தொண்டரையும் பதவி தேடி வரும் என மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் குறித்து பாஜக மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
‘தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டது பாஜக.நிர்வாகிகளுக்கோ, தொண்டர் களுக்கோ எந்த அதிர்ச்சியும் இல்லை. மற்ற கட்சியினருக்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். முருகன் மிகச்சிறந்த நிர்வாகி. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராக இருந்தபோது திறம்படப் பணி யாற்றியுள்ளார்.
தமிழகம் சமூக நீதிக்கான மாநிலம். இங்கு பாஜக மட்டுமே 2-வது முறையாக பட்டியலினத்தவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கியுள்ளது. சமூக நீதி குறித்து பல கட்சிகளின் வெற்றுப் பேச்சுக்கு பாஜக தனது செயல்பாட்டின் மூலம் பதில் தந்துள்ளது.
திறமை, விசுவாசம், உழைப்பின் அடிப்படையில்தான் முருகனைத் தேடி இப்பதவி வந்துள்ளது.
திமுக., காங்கிரசில் குடும்ப வாரிசுகளுக்கு மட்டுமே இதுபோன்ற பதவிகள் வழங் கப்படும். பாஜக.வில் மட்டுமே சாதாரண தொண்டரையும் பதவி தேடிவரும், என்று கூறினார்.