

அண்ணா பல்கலைக்கழகத்தை பிரிப்பது, மத்திய அரசுக்கு தாரைவார்ப்பது போன்ற எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நேற்று நடை பெற்ற விவாதம்:
க.பொன்முடி: அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிக்க வும், அண்ணா பெயரை எடுக்கவும் மத்திய அரசு முயற்சித்து வரு கின்றது. நம் மாநிலத்தின் கட்டுப்பாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் இருக்கும் நிலையைஉருவாக்க வேண்டும்.
அமைச்சர் கே.பிஅன்பழகன்: சீர்மிகு பல்கலைக்கழகமாக அறிவிக்கும் வகையில் மத்திய அரசு தெரிவித்துள்ளதால் இதுபோன்று கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் 5 அமைச்சர்கள் குழு அமைத்து, கல்வியாளர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் சாதக,பாதகங்களை அறிந்து அறிக்கைஅளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கும் எண்ணமோ, மத்திய அரசுக்கு தாரைவார்க்கும் எண்ணமோ அண்ணா பெயரை விட்டுக் கொடுக்கும் எண்ணமோ அரசுக்கு இல்லை.
இவ்வாறு விவாதம் நடை பெற்றது.