கைத்தறி பாரம்பரியத்தை காக்க தொடர்ந்து தனிக்கவனம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி

கைத்தறி பாரம்பரியத்தை காக்க தொடர்ந்து தனிக்கவனம்: முதல்வர் ஜெயலலிதா உறுதி
Updated on
1 min read

கைத்தறி தொழிலின் பாரம்பரி யத்தை காக்க தொடர்ந்து தனிக் கவனம் செலுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதி யளித்துள்ளார்.

விழாவில் முதல்வர் ஜெய லலிதா கலந்துகொள்ள இயலாத தால் அவரது சார்பில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரின் உரையை முதலில் ஆங்கிலத்திலும் அதைத் தொடர்ந்து, தமிழிலும் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:

தமிழகத்தில் 3 லட்சத்து 19 ஆயி ரம் பேர் கைத்தறி நெசவுத் தொழி லில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக கைத்தறி துணி வகைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. கைத்தறி நெசவாளர்களின் நல னுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் திட்டம் மூலம் கைத்தறி நெசவாளர் களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

10 ஆயிரம் நெசவாளர் குடும் பங்கள் பயன்பெறும் வகையில் ரூ.260 கோடி செலவில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு லட் சத்து 34 ஆயிரம் நெசவாளர் குடும் பங்களுக்கு கட்டணம் ஏதும் இன்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கான ஓய்வூதியத் தொகை, குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நெசவாளர் திட்டங்களை செயல்படுத்து வதில் தமிழகம் முன்னணியில் திகழ்கிறது. கைத்தறி நெசவாளர் கள் 1,163 கூட்டுறவு சங்கங்களில் ஒருங்கிணைந்துள்ளனர். முதலா வது தேசிய கைத்தறி தினத்தை கொண்டாட சென்னையைத் தேர்ந்தெடுத்ததற்காக பிரதம ருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கைத்தறி நெசவாளர்களின் நலனை காப்பது எனது அரசின் கடமையாகும். கைத்தறி தொழி லின் பாரம்பரியத்தை காக்க தொடர்ந்து தனிக்கவனம் செலுத் தப்படும் . ஜவுளித் தொழிலில் குறிப்பாக, கைத்தறி நெசவில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் வகிக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. இவ் வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in