Published : 12 Mar 2020 07:51 PM
Last Updated : 12 Mar 2020 07:51 PM

ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்கிறேன்: சீமான் 

ரஜினியின் அரசியல் முடிவை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை கடுமையாக எதிர்த்து வருபவர். ரஜினியை மிகவும் மதிப்பதாகவும், சினிமாவில் அவரை மிகவும் ரசிப்பதாக சொல்லும் சீமான் ரஜினியை அரசியல் ரீதியாக தான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவார். காரணம் ஒரு தமிழன் தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறுவார்.

இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது செய்தியாளர் சந்திப்பில் இந்த சிஸ்டத்தை மாற்றவேண்டும், சிஸ்டம் கெட்டுள்ளது எனக்கூறி தேர்தல் அரசியலில் இரு பெரும் கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும். ரசிகர்களை பணம் செலவு செய்ய வைத்து அவர்களை பலிகடாவாக்க விரும்பவில்லை.

ஒரு அமைப்பு அந்த அமைப்பு நல்லவர்களை, திறமைசாலிகளை தேர்வு செய்யும், அதில் ஒருவர் முதல்வராக இருப்பார் நான் முதல்வராக வர விரும்பவில்லை என்று தெரிவித்து. இதுபோன்ற விஷயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு எழுச்சி உருவாக வேண்டும் அதற்கு ரசிகர்கள், ஊடகங்கள் பாடுபடவேண்டும் என்று பேசினார்.

இதற்கு நாம் தமிழர் சீமான் ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்:

அவரது ட்வீட் பதிவு:

“ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்!
இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும், உறுதியோடும், உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்”.

எனத்தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x