தமிழகம்
நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு: கோவையில் கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பு
கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நக்சலைட்டுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார். இவரை 15 நாட்களில் காவலில் வைக்குமாறு முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஆர்.சக்திவேல் உத்தரவிட்டார்.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்தவர் ஸ்ரீமதி. இவருக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பிருப்பதாக வந்த தகவல்களை அடுத்து இவரை ஆனைக்கட்டி செக் போஸ்ட் அருகே கியூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர்.
ஸ்ரீமதி கர்நாடகாவில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இவரை இன்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபடி ஆர்.சக்திவேல் முன்பு போலீஸார் ஆஜர் படுத்தினர், அவர் மார்ச் 26ம் தேதி வரை இவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து பலத்த பாதுகாப்புகளுக்கிடையே ஸ்ரீமதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
