

அக்கா சசிகலா பிப்ரவரியில் விடுதலையாகிவிடுவார் என்று நம்பித்தான் தனது மகன் ஜெயானந்தின் திருமணத்தை மார்ச் மாதத்துக்கு தள்ளினாராம் திவாகரன். ஆனால், அக்காவுக்கும் விடுதலை கிடைக்கவில்லை... தினகரன், விவேக் உள்ளிட்ட பிற முக்கியச் சொந்தங்களும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. தினகரனின் அப்பா விவேகானந்தன் மட்டும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு தங்கச் சங்கிலிகளைப் பரிசளித்தார். அமைச்சர் காமராஜ் அதிமுகவினர் யாரும் பழைய பாசத்தில் மன்னார்குடி பக்கம் போய்விடுவார்கள் என்று நினைத்தாரோ என்னவோ... அதே தினத்தில் தனது அக்கா பேரனுக்கு தஞ்சையில் திருமணத்தை வைத்திருந்தார். அப்படியும் சிலர் அங்கேயும் இங்கேயுமாக தலை காட்டியது தனிக்கதை. திவாகரனுக்கு ஒரே ஆறுதலான விஷயம், திமுக எம்எல்ஏ-க்களான டி.ஆர்.பி.ராஜா, புல்லட் ராமச்சந்திரன் உள்ளிட்ட திமுக தலைகள் திருமண விழாவில் கலந்துகொண்டது தான்.
- காமதேனு இதழிலிருந்து (மார்ச் 18, 20200)