

முதல்வராக இருக்க மாட்டேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்த விஷயங்கள் தொடர்பாக கருத்து கேட்டதற்கு "நான் இளைய அரசியல்வாதிதான்- மூத்த அரசியல்வாதியல்ல" என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தான் கட்சித் தலைவராக இருப்பேன் எனவும், முதல்வராக இருக்க மாட்டேன் என்று தெரிவித்தது தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "அது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சி தொடங்குவதாக தெரிவித்தபோது வரவேற்றேன். முதல்வராக இருங்கள் என்று நான் அவரிடம் கூற முடியுமா?" என்று குறிப்பிட்டார்.
ரஜினி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக கேட்டதற்கு, அப்பேட்டியை பார்த்து விட்டு பதில் தருகிறேன். எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள் என்றார்.
நீங்கள் மூத்த அரசியல்வாதி என்பதால் இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கேட்கிறோம் என்று கூறியதற்கு, " நான் மூத்த அரசியல்வாதி அல்ல. இளைய அரசியல்வாதிதான்" என்று அவர் குறிப்பிட்டார்.