

கரோனா வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான விளம்பரப் பதாகைகள், கோயில்களில் வைக்கப்பட்டுவருகின்றன.
உலகை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 (கரோனா) வைரஸ் உலக சுகாதார அமைப்பால் (WHO) கொள்ளை நோய் (Pandemic) என அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 (கரோனா) வைரஸ் தாக்கம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, தமிழக அரசின் பொதுச் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்கள் அடங்கிய விளம்பரப் பதாகைகள், கோயில்களில் வைக்கப்பட்டுவருகின்றன.
தென்காசி நகர் அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில், அருள்மிகு பொருந்தி நின்றப் பெருமாள் திருக்கோயில் மற்றும் கீழப்பாவூர் அருள்மிகு நரசிங்கப் பெருமாள் திருக்கோயில் ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் உத்தரவுப்படி இவை நிறுவப்பட்டுள்ளன.