

மதுவுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் கட்சிகள் ஆதாயம் தேடி வருவதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
இதுகுறித்து நாமக்கல்லில் அவர் கூறியதாவது: சசிபெருமாளின் மரணம் மதுவிலக்கை நடைமுறைப் படுத்த அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. படிப்படியாக மதுவின் பிடியில் இருந்து தமிழ கத்தை விடுவிக்க அரசியல் கட்சி கள் சட்டத்துக்கு உட்பட்டு அமைதி யான வழியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் மதுக்கடை களுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் வன்முறையாக மாறக்கூடாது. அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, அரசியல் ஆதாயம் கருதி, ஓட்டு வங்கியை நிலை நிறுத்திக்கொள்ள நடத்தப்படுகின்றன.
கேரள அரசு 10 ஆண்டுகளில் மதுவிலக்குக் கொண்டுவருவோம் என அறிவித்துள்ளது. அதுபோல் தமிழகத்தில் 5 ஆண்டுகளில் மதுவிலக்கு சாத்தியம். மது விற்பனையை 4 மணி நேரமாக குறைத்து, மாதம்தோறும் கடை களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்து, அதற் கான ஆக்கப்பூர்வமான நட வடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய அவர் தவறினால் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அவரு டைய தோல்விக்கு இதுவே பிரதான காரணமாக அமைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.