செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்த்த ரஜினி

ரஜினி | படம்: ம.பிரபு
ரஜினி | படம்: ம.பிரபு
Updated on
1 min read

ரஜினி இன்றைய சந்திப்பில், பத்திரிகையாளர்களின் கேள்விகளை முழுமையாகத் தவிர்த்துவிட்டார்.

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று (மார்ச் 12) சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது தனது அரசியல் பார்வை, அரசியல் மாற்றம் ஏற்படுத்த வைத்துள்ள 3 திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்களை எடுத்துரைத்தார்.

தன் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கட்சித் தலைமையும் ஆட்சித் தலைமையும் வெவ்வேறாக இருக்கும். நான் கட்சித் தலைவராக மட்டுமே இருப்பேன் என்று ரஜினி கூறினார். முதல்வராக என்னை நினைத்துப் பார்க்கவே முடியாது. சட்டப்பேரவையில் உட்கார்வது, பேசுவது என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கவே இல்லை. என் ரத்தத்தில் அது வரவே இல்லை என்றும் அவர் கூறினார்.

இளைஞர்களிடம் எழுச்சி ஏற்பட்ட பிறகு அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ரஜினி, ''தயவுசெய்து கேள்விகளை இப்போது எடுத்துக் கொள்ளவில்லை. அதை எடுத்துக்கொண்டால், இப்போது நான் பேசிய விஷயங்கள் காணாமல் போய்விடும். நான் பேசிய விஷயங்களை மக்களிடையே கொண்டு சேருங்கள்” என்று கூறி பத்திரிகையாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.

பல்வேறு கேள்விகளை ரஜினியிடம் எழுப்ப, பத்திரிகையாளர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அதை மொத்தமாக ரஜினி தவிர்த்தது ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in